இன்று நியூசிலாந்தில் 21,015 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்றைய சமூக தொற்றுகளில் ஆக்லாந்தில் 7234 பேரும், நோர்த்லேண்டில் 689 பேரும், வைகாடோவில் 2016 பேரும், Bay of Plenty இல் 1392 பேரும், Lakes இல் 632 பேரும், Hawke's Bay இல் 700 பேரும், Mid Central இல் 653 பேரும்,  Whanganui இல் 156 பேரும், தரணகியில் 524 பேரும், Tairawhiti இல் 353 பேரும், Wairarapa வில் 170 பேரும், Capital and Coast இல் 1858 பேரும், Hutt Valley வில் 1103 பேரும், Nelson Marlborough வில் 449 பேரும், Canterbury இல் 2021 பேரும், South Canterbury 109 பேரும், தெற்கில் 918 பேரும், West coast இல் 26 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் 19 பேர் உட்பட 845 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நாட்டின் எல்லையில் இன்று 15 கொவிட் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தொற்றுநோய் பரவல் தொடங்கியதிலிருந்து இதுவரை நியூசிலாந்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 306,919 ஆகும்.

இதனிடையே நாட்டில் நேற்றையதினம் 282 முதல் டோஸ்கள், 822 இரண்டாவது டோஸ்கள் மற்றும் 8970 பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்பட்டன.

மேலும் குழந்தைகளுக்கான கொவிட் தடுப்பூசியின் 625 முதல் டோஸ் மற்றும் 295 இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டன.