மொத்தமுள்ள 138 நகராட்சிகளில் திமுக 111 இடங்களிலும், அதிமுக 09 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

மாநிலம் முழுவதும் இதுவரை வந்துள்ள முடிவுகளின்படி திமுக அணி மிகப்பெரிய அளவில் முன்னிலை வகிக்கின்றன.

அதிமுக, பாஜக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஆங்காங்கே வெற்றியை பதிவு செய்து வருகின்றன.

காலை 11 மணி நிலவரம் மாநில தேர்தல் ஆணையம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,

தமிழக நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் இதுவரையிலான முடிவுகளின்படி, மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் திமுக 20 இடங்களில் முந்துகிறது.

மொத்தமுள்ள 138 நகராட்சிகளில் திமுக 111 இடங்களிலும், அதிமுக 09  இடங்களிலும் உள்ளது.

மொத்தமுள்ள 489 பேரூராட்சிகளில் திமுக 277 இடங்களிலும், அதிமுக 21 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

நகராட்சிகளில் மொத்தமுள்ள 3843 வார்டுகளில் 532 இடங்களுக்கு முடிவுகள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திமுக- 333
அதிமுக- 90
பாஜக- 09
காங்கிரஸ்- 25
பாமக- 09
இ.கம்யூ-02
அமமுக- 05
தேமுதிக- 02
மா.கம்யூ- 07
மற்றவை- 49