இன்று நியூசிலாந்தில் 23 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் சமூகத்தில் 56 ஒமிக்ரோன் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இன்றைய சமூக தொற்றுகளில் ஆக்லாந்தில் 12 பேரும், வைகாடோவில் 03 பேரும், Rotorua வில் 05 பேரும், Capital and Coast இல் ஒருவரும், Nelson Marlborough வில் ஒருவரும்,  நோர்த்லேண்டில் ஒருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

இதனிடையே 06 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் நாட்டின் எல்லையில் 36 கொவிட் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

சமூகத்தில் இதுவரை உறுதிப்படுத்தப்பட தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 11,564 ஆகும்.

மேலும் தொற்றுநோய் பரவல் தொடங்கியதிலிருந்து இதுவரை நியூசிலாந்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 15,369 ஆகும்.

நாட்டில் நேற்றையதினம் 56,899 பூஸ்டர் டோஸ்களுடன்  15,102 குழந்தைகளுக்கான கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.