பல நாடுகள் நான்கு வாரங்களுக்குப் பின்னர் இந்த வயதினருக்கு இரண்டாவது டோஸை வழங்குகின்ற அதே வேளை, இலங்கையில் தடுப்பூசிகள் தொடர்பான விசேட நிபுணர் குழு மூன்று மாதங்களுக்குப் பின்னரே இரண்டாவது டோஸை வழங்கப் பரிந்துரைத்ததாக இராஜாங்க அமைச்சரான சன்ன ஜயசுமண தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பொது மக்களை பைஷர் பூஸ்டர் டோஸை விரைவாகப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதுடன், 20 வயதுக்கு மேற்பட்டவர்களில் இரண்டாவது டோஸைப் பெற்று மூன்று மாதங்களைப் பூர்த்தி செய்துள்ளவர்கள் பூஸ்டர் டோஸைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

இரண்டாவது தடுப்பூசி போடப்பட்டு 6 மாதங்கள் நிறைவ டைந்த போதிலும் சில குழுக்கள் பூஸ்டர் டோஸைப் பெறவில்லை என்றும், முதல் மற்றும் இரண்டாவது டோஸ் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி இந்தக் கட்டத்தில் குறைந்திருக்கலாம் என்றும் அவர் மேலும் தெரிவித் துள்ளார்.இலங்கை கிரிக்கெட் தொழில்நுட்ப மற்றும் ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரொஷான் மஹாநாம தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக தொழில்நுட்ப குழுவிலிருந்து அவர் விலகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை கிரிக்கெட்டின் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட இந்தக் குழுவின் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் அரவிந்த டி சில்வா உள்ளார்.

அதேபோல, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான முத்தையா முரளிதரன் மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் இந்தக் குழுவின் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றனர்.

இதனிடையே, ஐசிசி இன் முன்னாள் போட்டி மத்தியஸ்தரான ரொஷான் மஹாநாம, பாகிஸ்தானில் இம்மாதம் 27ஆம் திகதி முதல் நடைபெறவுள்ள பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் போட்டி மத்தியஸ்தர்களில் ஒருவராக பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.