உக்ரைன் தலைநகரை மின்னல்வேக தாக்குதல் மூலம் ரஷ்யா கைப்பற்றலாம் என்ற அச்சத்தின் மத்தியில்  அமெரிக்கா தனது 8000 படையினரை தயார் நிலையில்வைத்துள்ளதாக  அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பென்டகன் பேச்சாளர் ஜோன் கிர்பி இதனை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் தற்போது உள்ள 8000படைவீரர்களும் நேட்டோவின் என்ஆர்எவ் படைப்பிரிவு செயற்பட தொடங்கினால் அதில் இணைக்கப்படுவார்கள் என கிர்பி தெரிவித்துள்ளார்.

ஏனைய நிலைமைகளை எதிர்கொள்வதற்கும் அவர்களை பயன்படுத்த உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேட்டோ என்ஆர் படைப்பிரிவை மீண்டும் பயன்படுத்த தொடங்கினால் அல்லது பாதுகாப்பு நிலைமை மோசமடைந்தால் அமெரிக்கா தனது படையினரை துரிதமாக பயன்படுத்தக்கூடிய நிலையிலிருக்கும் என கிர்பி தெரிவித்துள்ளார்.

நேட்டோவின் உறுப்பு நாடுகளின் பாதுகாப்பிற்கு உதவுவதற்கு அமெரிக்கா எந்நேரமும் தயார் என்ற செய்தியை நேட்டோவின் கிழக்கு பகுதிநாடுகளிற்கு தெரிவிப்பதற்காகவே ஐரோப்பாவில் அமெரி;க்கா படையினரை பயன்படுத்த விரும்புகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் நேட்டோவின் உறுப்பு நாடில்லாத உக்ரைனில் படையினரை நிறுத்தப்போவதில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

உக்ரைனில் தற்போது  அமெரிக்காவின் இராணுவ ஆலோசகர்கள் 150 பேர் உள்ளனர் அவர்களை வெளியேற்றும் எண்ணமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.