இந்தியாவில் இளம் பியானே இசைக்கலைஞராக அறியப்படுபவர் லிடியன் நாதஸ்வரம். தமிழ் இசையமைப்பாளர் வர்ஷன் சதீஷின் மகனான இவர், தனது 2 வயதில் இருந்து இசையுடன் பயணித்து வருகிறார்.

இளம் வயதில் உலகம் போற்றும் இசைக்கலைஞர்களில் ஒருவராக புகழ்பெற்றுள்ள இவர், கடந்த 2019-ம் ஆண்டு சிபிஎஸ் நடத்திய டேலண்ட் ஷோவில் வோல்ட் பெஸ்ட் என்ற விருதை பெற்றுள்ளார்.

14 இசைக்கருவிகளை வாசிக்கும் திறன் கொண்ட விடியன் நாதஸ்வரம், தற்போது மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் தயாராகி வரும் பரோஸ் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில், லிடியன் நாதஸ்வரம் தற்போது இசையமைப்பாளர் இளையராஜாவுடன் தான் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
 
அந்த பதிவில், எனது இசை ஆசிரியர் “மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா மாமா” அவர்கள் அனுபவத்தில் நான் அவருடைய முதல் மற்றும் ஒரே மாணவன் என்று கூறியதை உங்கள் அனைவருக்கும் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

உங்கள் அனைவரின் அன்பும் ஆதரவும் எனக்கு வேண்டும் அனைவருக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், இளையராஜா ரசிகர்கள் பலரும் இந்த பதிவுக்கு வாழ்த்துக்களை தெரிப்பதோடு மட்டுமல்லாமல், தங்களது சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்த வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த 2020-ம் ஆண்டு தனது பிறந்த நாளில் தன்னை சந்தித்த லிடியனுக்கு இளைராஜா நாதஸ்வரம் ஒன்றை பரிசாக வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து தற்போது இளையராஜா லிடியனை தனது முதல் மாணவன் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இசை மட்டுமல்லாது நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் லிடியன் நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அத்கன் சத்கன் என்ற படம் வெளியானது.

இசையில் சாதிக்க துடிக்கும் ஒரு இளைஞனை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த படம் பலரின் பாராட்டுக்களை பெற்றது.