இன்று பிற்பகல் New Plymouth இன் புறநகர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பிற்பகல் 1.15 மணிக்கு பின்னர் SH3 மற்றும் Holly Oak Terrace சந்திப்பில் இரண்டு வாகனங்கள் விபத்துக்குள்ளான இடத்திற்கு அவசர சேவைகள் வரவழைக்கப்பட்டன.

வாகனம் ஒன்றில் பயணித்த மற்றொருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

விபத்து நடந்த பகுதியில் மாநில நெடுஞ்சாலை 3 மூடப்பட்டு மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

வாகன சாரதிகள் அப்பகுதியை தவிர்க்குமாறும் அல்லது பயணத்தை தாமதப்படுத்துமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.