இன்று சமூகத்தில் 25  கொவிட் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது, இதில் எட்டு ஒமிக்ரான் தொற்றுகளும் அடங்குவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்று சமூக தொற்றாளர்களில் ஆக்லாந்தில் 13 பேரும், வைகாடோவில் நான்கு பேரும், நார்த்லேண்டில் நான்கு பேரும், நெல்சன் டாஸ்மானில் இரண்டு பேரும், ரோட்டோருவாவில் ஒருவரும், மற்றும் Manawatu வில் ஒருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் இருப்பவர்களின் சராசரி வயது 57 ஆகும்.

இதனிடையே நிர்வகிக்கப்பட்ட தனிமைப்படுத்தலில் இன்று 50 தொற்றுகள் உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தடுப்பூசிகளில், 21,318 பூஸ்டர் டோஸ்களும், 6399 குழந்தைகளுக்கான டோஸ்களும் நேற்று வழங்கப்பட்டன.

"பூஸ்டர்கள் ஓமிக்ரான் மாறுபாடு உட்பட கொவிட் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கின்றன, வைரஸ் பரவுவதை மெதுவாக்க உதவுகின்றன" என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நேற்றிரவு 11.59 மணிக்கு நாடு முழுவதும் சிவப்பு விளக்கு அமைப்பிற்கு மாற்றப்படும் என்றும் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.