உக்ரைனின் ஜனாதிபதியை பதவி நீக்கிவிட்டு ரஸ்யாவிற்கு வேண்டப்பட்டஒருவரை நியமிப்பதற்கான சதி முயற்சியில் விளாடிமிர் புட்டின் ஈடுபட்டுள்ளார் என பிரிட்டன் குற்றம்சாட்டியுள்ளது.

உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர் Yevhen Murayev    என்பவரை  நியமிப்பதற்கான முயற்சிகளில் ரஸ்யா ஈடுபட்டுள்ளது என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சு குற்றம்சாட்டியுள்ளது.

இன்று வெளியிடப்படும் தகவல் உக்ரைனை சீர்குலைக்கும் ரஸ்யாவின் முயற்சிகளை வெளிப்படுத்தியுள்ளது.

கிரெம்ளினின் சிந்தனையை வெளிப்படுத்தியுள்ளது என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் லிஸ் டிரஸ் தெரிவித்துள்ளார்.

ரஸ்யா தனது நடவடிக்கைகளின் தீவிரத்தை குறைக்க வேண்டும் ஆக்கிரமிப்பு தவறான தகவல்களை பரப்பும் நடவடிக்கைகளை கைவிட்டு இராஜதந்திர முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐக்கிய இராச்சியமும் அதன் சகாக்களும் தெரிவித்துவருவது போல உக்ரைன் மீதான ரஸ்யாவின் எந்த வன்முறையும் பெரும் இழப்புகளுடனான மூலோபாய தவறாக  அமையும் என அவர் எச்சரித்துள்ளார்.

உக்ரைன் தனது ரஸ்ய சார்பு ஜனாதிபதியை பதவியிலிருந்து அகற்றிய பின்னர் ரஸ்யா 2014 இல் உக்ரைனின் ஒரு பகுதியான கிரிமியாவை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளது.

உக்ரைன் எல்லையில் ரஸ்யா தனது படையினரை பெருமளவிற்கு குவித்துள்ள நிலையில் 2022 இன் ஆரம்பத்தில் ரஸ்யா உக்ரைன்மீது தாக்குதலை மேற்கொள்ளக்கூடும் என மேற்குலக புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.