சீனாவின் வடமேற்கே குயிங்காய் மாகாணத்தில் டெலிங்கா நகரில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகி உள்ளது என சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம் தெரிவித்து உள்ளது.

இந்நிலநடுக்கம் 8 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இதுவரை, பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.