எவர்கிரீன் கிரசண்டில் ஏற்பட்ட குறித்த தீ பரவல் நேற்று மாலை 5 மணிக்குப் பிறகு கட்டுக்குள் வந்தது, ஆனால் தரைப்படையினர் இரவு முழுவதும் சம்பவ இடத்திலேயே இருந்தனர்.

சுமார் 14 ஹெக்டேர் நிலம் எரிந்து தீக்கிரையானது.

இன்று காலை தீயணைப்பு நடவடிக்கைகள் மீண்டும் அதிகரிக்கும் என்று தீயணைப்பு மற்றும் அவசரநிலை தெரிவித்துள்ளது.

இன்று காலை 6.15 மணிக்கு ஹெலிகாப்டர்கள் இயங்கத் தொடங்கின, அதே நேரத்தில் தரைப்படையினர் ரிமுடகா சிறைச்சாலைக்கு அருகிலும் சாட்ஸ்வொர்த் சாலையின் மேற்புறத்திலும் பணிபுரிந்தனர்.

ட்ரெண்டாம் மற்றும் சில்வர்ஸ்ட்ரீம் பகுதியில் வசிப்பவர்களுக்கு அடுத்த சில நாட்களில் புகை மூட்டம் காணப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

புகையினால் பாதிக்கப்படுபவர்கள்,தங்கள் கதவுகளையும் ஜன்னல்களையும் மூடி வைத்துக்கொள்ளவும், அவர்களுக்கு மருத்துவ ஆலோசனை தேவைப்பட்டால் ஹெல்த்லைனை அழைக்கவும் தீயணைப்பு மற்றும் அவசரநிலை வலியுறுத்தியுள்ளது.