மட்டக்களப்பு செங்கலடி சவுக்கடி பகுதியில் இடம்பெற்ற வழிப்பறி கொள்ளைச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையின் தன்னாமுனை வட்டார பிரதேச சபை உறுப்பினர் வேலயுதாம் புவிதாசன் உள்ளிட்ட குழுவினரை வழிப்பறி சம்பவத்தில் பொலிஸார் மடக்கிபிடித்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கடந்த தைபொங்கள் தின இரவுவேளையில் செங்கலடி சவுக்கடி பகுதியில் பிரதேச சபை உறுப்பினர் வேலாயுதம் புவிதாசன் உள்ளிட்ட 04பேர் அவ்வழியால் வந்த குடும்பஸ்தர்களை மதுபோதையில் அவர்களை தாக்க முற்பட்டு அவர்களிடம் இருந்த பெறுமதியான தங்க நகைகளையும் ஆபகரிக்க முயன்றுள்ளனர்.

மதுபோதையில் இருந்த பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட குழுவினரிடம் இருந்து தப்பித்த கணவர் மனைவி குழந்தைகள் சவுக்கடி கடற்கரைவழியால் தப்பிச்சென்று கோட்டமுனை மைதானம் பணியாளர்களின் உதவியூடாக கொக்குவில் பொலிஸார் ஊடாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து செய்துள்ளனர். 

இதே வேளை வழிப்பறிச் சம்பவத்தில் ஈடுபட்ட பிரதேச சபை உறுப்பினர் உட்பட்ட குழுவினரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுப்பட்டுள்ளனர்.

 எதிர் வரும் 21திகதி வரை பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட நால்வரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்