ஸ்ட்ராட்போர்டில் (Stratford) இருந்து கிழக்கே 25 கிலோ மீட்டர் தொலைவில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது.

இரவு 11.49 மணிக்கு ஏற்பட்ட குறித்த நிலநடுக்கம் வடக்கு மற்றும் தெற்கு தீவுகள் முழுவதும் உணரப்பட்டது.

Wanaka உட்பட 35,000 பேர் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்ததாக ஜியோநெட் இணையதளத்தில்     தெரிவித்துள்ளனர்.

இந்த நிலநடுக்கம் தரனகி (Taranaki) பகுதியில் இருந்து 187 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஜியோநெட் தெரிவித்துள்ளது.