இன்று பிற்பகல் Ōamaru வில் ரயிலுடன் ஒரு வாகனம் ‌மோதுன்டு ஏற்பட்ட விபத்தை அடுத்து Thames தெரு மூடப்பட்டுள்ளது.

மாலை 4 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இட்சன் தெரு சந்திப்பிற்கு அருகில் உள்ள ரயில்வே லெவல் கிராசிங்கில் Thames தெரு மூடப்பட்டுள்ளதாகவும், அந்த பகுதியை தவிர்க்குமாறு வாகன ஓட்டுநர்கள் கேட்டுக் கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.