இம்மாதம் 18ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆற்றவுள்ள உரை தொடர்பில் இரண்டு நாள் பாராளுமன்ற விவாதம் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி ராஜபக்ஷ தனது கொள்கை அறிக்கையை வெளியிட்டு புதிய பாராளுமன்ற அமர்வை இம்மாதம் 18ஆம் திகதி ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது, ​​எதிர்வரும் 19 ஆம் மற்றும் 20 ஆம் திகதிகளில் விவாதத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம், அரசியலமைப்பின் 33(A) பிரிவின் கீழ் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரையாற்றியதைத் தொடர்ந்து ஒத்திவைப்பு விவாதத்தை முன்னெடுக்குமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபையின் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்ததில் இருந்து இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருவதாக ரணில் விக்கிரமசிங்க இதன் போது தெரிவித்திருந்தார்.