இன்று நியூசிலாந்தில் 65 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மேலும் இரண்டு பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒரு அறிக்கையில் 30 வயதான நபர் ஒருவர் ஜனவரி 5 ஆம் திகதி தனது வீட்டில் உயிரிழந்ததாகவும் பின்னர் அவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் 60 வயதான கொவிட் தொற்றாளர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மிடில்மோர் மருத்துவமனையில் உயிரிழந்ததாக அமைச்சகம் தெரிவித்தது.

இன்றைய சமூக தொற்றுகளில் ஆக்லாந்தில் 17 பேரும், வைகாடோவில் ஒருவரும், Bay of Plenty இல் 04 பேரும், Rotorua வில் 04 பேரும், South Canterbury  இல் ஒருவரும், கிறிஸ்ட்சர்ச்சில் ஒருவரும், தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் 2 பேர் உட்பட 31 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் நிர்வகிக்கப்பட்ட தனிமைப்படுத்தலில் 28 கொவிட் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

சமூகத்தில் இதுவரை உறுதிப்படுத்தப்பட தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 11,210 ஆகும்.

மேலும் தொற்றுநோய் பரவல் தொடங்கியதிலிருந்து இதுவரை நியூசிலாந்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 14,473 ஆகும்.

நாட்டில் நேற்றையதினம் 1495 முதல் டோஸ்கள், 3812 இரண்டாவது டோஸ்கள், 646 மூன்றாவது முதன்மை டோஸ் மற்றும் 45,984 பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்பட்டன.