அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள அரசியல் கட்சிகள் உட்பட பல அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து புதிய பொது கூட்டணியை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஐக்கிய மக்கள் சக்தி ஈடுபட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி இது குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது.
இது குறித்த பேச்சுவார்த்தைகள் கடந்த சில மாதங்களாக இடம்பெறுவதாக தெரிவித்துள்ள அரசியல் வட்டாரங்கள் அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள அரசியல் கட்சிகள் அதிலிருந்து விலகி பொதுக்கூட்டணியில் இணைவதற்கான விருப்பத்தை வெளியிட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளது.

அரசாங்கம் ஏற்கனவே பல பிரிவுகளாக பிளவுபட்டுள்ளது- சிலர் பதவியிலிருந்தவாறே அரசாங்கத்தின் கொள்கைகளிற்கு எதிராக செயற்படுகின்றனர் என அரசியல்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் அரசாங்கத்தின் கொள்கைகள் தீர்மானங்கள் தொடர்பில் ஊடகங்களிற்கு வெளியிட்டுள்ள கருத்துக்கள் மூலம் சமீபகாலத்தில் இந்த பிளவு வெளிப்படையாக தெரியவந்துள்ளது.

அமைச்சரவையின் ஆதரவுடன் கைச்சாத்திடப்பட்ட யுகதனாவி உடன்படிக்கை நீதிமன்றத்தின் முன்னால் உள்ளது - மூன்று அமைச்சர்கள் அதற்கு எதிராக நீதிமன்றம் சென்றுள்ளனர்.

2019 -2020 ஜனாதிபதி பிரதமர் தேர்தல்களில் அரசதலைவர்களிற்கு கிடைத்த ஆதரவை இல்லாமல் செய்வதற்காக அரசாங்கத்தின் தலைவர்களிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நடவடிக்கை அரசாங்கத்திற்குள் இடம்பெறுவது குறித்து தெரியவந்துள்ளது.

அரசாங்கத்தின் ஒரு பகுதியாகயிருந்தவாறு அரசாங்கத்தின் அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்கள் அதன் கொள்கைகளை விமர்சிப்பது ஒழுக்கரீதியான நடவடிக்கையாக என ஜனாதிபதி சமீபத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐக்கிய மக்கள் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது- அந்த கட்சி பல அரசியல் கட்சிகளுடன் வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது.

எனினும்  இந்த கூட்டணிக்கு பொதுவேட்பாளராக தலைமை தாங்குவார் என்ற விடயத்திற்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லைஇது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

எதிர்கால தேர்தல்களி;ல் போட்டியிடுவதற்கு ஏற்ற வகையில் புதிய அரசியல் கூட்டணி தொடர்பான இறுதிமுடிவுகள் இந்த வருடத்திற்குள் எடுக்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.