என்னை இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவது பெரிய விடயமல்ல எனவும், சட்டத்தரணி என்ற வகையில் நாளை முதல் நீதிமன்றத்துக்குச் செல்லவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் சந்தைக்குச் சென்ற போது பொதுமக்கள் பொருட்களின் விலை குறித்து கேட்டபோது முற்று முழுதாக விவசாய அமைச்சு பிழையானது எனத் தெரிவித்தேன் என கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற் றும் தொலைதூரக் கல்வி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சில் ஊடகங்களுக்கு கருத்து தெரி விக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இராஜங்க அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாகக் கேள்விப்பட்டேன். எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அவை அவ்வளவு பெரிய விடயங்கள் இல்லை. ஜனா திபதிக்கு என்னை பதவியிலிருந்து நீக்க உரிமை உள்ளது.  2000ஆம் ஆண்டு நான் அமைச்சரானேன் என அவர் கூறினார்.

மேலும் மூன்று ஜனாதிபதிகளின் கீழ் பணியாற்றி யுள்ளேன் என்றும்  எனக்கு தொழில் இருக்கிறது. அதுதான் சட்டத்தரணி தொழில். நாளை முதல் அந்தத் தொழிலில் ஈடுபடப் போகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.