பண்டிகைக் காலங்களில் கடுமையாக அதிகரித்து வந்த முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் தற்போது குறைந்துள்ளன.

750 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை தற்போது 700 ரூபாவிலிருந்து 690 ரூபாவாக உள்ளதாக கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோழி இறைச்சியின் விலை 50 முதல் 60 ரூபா வரையிலும், முட்டையின் விலை 3 ரூபாவினாலும் குறைந்துள்ளன.

அதன்படி ரூ.26 ஆக இருந்த முட்டை தற்போது ரூ.23க்கு விற்கப்படுகிறது.