ஐசிசியின் (ICC) 2021 ஆண்டின் சிறந்த இருபதுக்கு 20 கிரிக்கெட் வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நால்வரில் இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்கவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இந்த விருதுக்கு பாகிஸ்தான் அணியின் விக்கட் காப்பாளர் மொஹமட் ரிஸ்வான், மிச்சல் மார்ஷ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.