மெதிரிகிரிய, குசும்பொகுன பிரதேசத்தில் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து ஒன்பது வயது சிறுவன் உயிரிழந் துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூன்று பேர் கொண்ட குடும்பத்தில் இரண்டாவது குழந்தையே உயிரிழந்துள்ளது.

குறித்த சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த பந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் வீட்டின் பின்புறமுள்ள கிணற்றில் விழுந்தது.

பல சந்தர்ப்பங்களில் சிறுவன் அதை எடுத்துத் தருமாறு தந்தையிடம் பலமுறை கெஞ்சிய போதிலும், தந்தை அதை மறந்துவிட்டதாகத் தெரியவந்துள்ளது.

தாய் தனது இளைய சகோதரனுடன் அயல் வீட்டிற்குச் சென்றிருந்த போது கிணற்றில் விழுந்த பந்தை எடுக்க முற்பட்ட போதே குழந்தை விபத்துக்குள்ளா கியிருக் கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
குழந்தை காணாமல் போயுள்ளமை குறித்து பெற்றோர் கள் அயலவர்களிடமும் தெரிவித்த போதிலும் அவர்களால் கண்டுபிடிக்க முடியாததால் மெதிரிகிரிய பொலி ஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளைக் கிணற்றில் விழுந்ததாகக் கூறப்படும் பந்து முற்றத்தில் காணப்பட்டமை தொடர்பாக ஆராய்ந்து பார்த்த போதே தோட்டத்தில் பாதுகாப்பற்ற முறையில் கட்டப்பட்டிருந்த கிணற்றில் வீழ்ந்த சிறுவன் சடலமாகக் கண்டெடுக்கப் பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மெதிரிகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்