நத்தார் வார இறுதியில் பொது மக்களின் நடத்தை வருத்தமளிப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவரான உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

அண்மையில் நிறைவடைந்த லங்கா பிரீமியர் லீக் போட்டிகளிலும் பல சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டல்கள் மீறப்பட்டுள்ளமையை அவதானித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
நாளாந்தம் முன்னெடுக்கப்படும் சோதனை மற்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கை உண்மையான நிலைமைக்கு துல்லியமாக இல்லை.

கொரோனா தொற்று சூழலை பொது மக்கள் புரிந்து கொள்ளத் தவறிவிட்டனர்.
இதுபோன்ற தவறான கருத்துகளால், பூஸ்டர் டோஸ் போட்டு கொள்பவர்களின் எண்ணிக்கையை வயது வந்தோரில் 50%க்கும் குறைவாகவே உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.