மனைவியை கட்டையால் அடித்து கொடூரமாகக் கொன்ற நபரை 14 வருடங்களுக்குப் பின்னர் பொலிஸார் கைது செய்தனர்.

குறித்த கொலை கடந்த 2007 ஆம் ஆண்டு இடம் பெற்ற துடன் 14 வருடங்களின் பின்னர் சந்தேகநபரான கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற் கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர் கடந்த 2007 ஆம் ஆண்டு  தலவாக்கலை  தபால் நிலையத்தில் பணிபுரிந்து வந்தவர் எனவும், அப் போது தல வாக்கலை வட்டகொட தோட்டத்தில் வசித்து வந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரின் தாக்குதலுக்கு உள்ளாகி மனைவி உயிரிழந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு 49 வயது என தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து,குறித்த சம்பவம் தொடர்பாக கடந்த 2009 ஆம் ஆண்டு   நுவரெலியா நீதவான் நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையின் படி கொழும்பு ஒழுங் கமைக்கப் பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை  முன்னெடுத்தது.

இதன்போது, 74 வயதான  சந்தேகநபர் எம்பிலிபிட்டிய துங்கம பிரதேசத் தில் 14 வருடங்களாகத் தங்கியிருந்தமை பொலிஸ் விசா ரணைகளி லிருந்து தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் நேற்று பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டது டன், இன்று நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முன்னி லைப்படுத் தப்படவுள்ளார்.