நீதி அமைச்சர் பதவியில் இருந்து அலி சப்ரி உடனடியாக நீக்கப்பட வேண்டும் எனவும் அவர் நீதி அமைச்சர் பதவியில் இருக்கும் வரையில் சஹ்ரான் செய்த குற்றங்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது எனவும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளரும் 'ஒரே நாடு - ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியின் தலைவருமான கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

'ஒரே நாடு - ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியின் தலைமைத்துவம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளதுடன், நீதி அமைச்சர் உள்ளிட்ட ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள நிலையில் அதற்குப் பதில் தெரிவிக்கும்போதே ஞானசார தேரர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

'ஒரே நாடு - ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணி உருவாக்கத்தின் போதும், அதில் என்னைத் தலைவராக நியமித்துள்ளதற்கும் பல்வேறு விமர்சனங்கள், அவதூறு கருத்துக்கள் எழுவதை அவதானித்தே வருகின்றேன். ஆனால், இவற்றை நாம் கருத்தில்கொள்ளப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.