நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து பத்து வர்த்தக சம்மேளனங்கள் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

இலங்கையில் தற்போது காணப்படும் பொருளாதார நெருக்கடி தொடர்ந்தால் தமது சம்மேளனங்களில் அங்கம் வகிப்பவர்கள் வேறு நாடுகளிற்கு செல்லவேண்டிய நிலையேற்படும் என பத்து வர்த்தக சம்மேளனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

நிலைமை மேலும் மோசமடைவதற்கு முன்னர் தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான துரிதப்படுத்துமாறு வர்த்தக சம்மேளனங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

நாங்கள் கோடிட்டுக்காட்டியுள்ள எதிர்மறையான விளைவுகளை தவிர்ப்பதற்கு அரசாங்க அதிகாரிகள் துரிதமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வலியுறுத்துகின்றோம் என வர்த்தக சம்மேளனங்கள் தெரிவித்துள்ளன.

தனியார் துறையினர் தங்கள் இறக்குமதிகளிற்கு அவசியமான வெளிநாட்டு நாணயத்தினை பெறுவதில் பெரும் சிரமத்தினை எதிர்கொண்டுள்ளனர் எனவும் வர்த்தக சம்மேளனங்கள் தெரிவித்துள்ளன.