ஓட்டமாவடி மஜ்மா  நகர் கொவிட்19 விசேட மையவாடியினை பார்வையிட விரும்பும் அடக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அசௌகரியங்களை தவிர்ந்து கொள்ள முன்கூட்டியே  கோறளை பற்று மேற்கு பிரதேச சபையின் அனுமதியினை பெறுவது கட்டாயமாகும். 

அனுமதிக்காக உறவினர்கள் வழங்க வேண்டிய தகவல்கள்

1. வருகை தருவர்களின் முழுப்பெயர்
2. அடையாளஅட்டை இலக்கம்
3. ஜனாஷா அடக்கப்பட்ட கப்ர் இலக்கம்
4. வருகை தரும் திகதி

என்பனவற்றை தெளிவாக  0777108383 எனும்  வட்சப் இலக்கத்திற்கு அனுப்பவும்.

ஏதேனும் சந்தேகம்  ஏற்பட்டால் 0652257429எனும்  இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தங்களது அனுமதியை உறுதிப்படுத்திக் கொள்ளவும்

பார்வையிட வருபவர்கள் கீழ் குறிப்பிடப்படும்  விதிமுறைகளை பேனுவது அவசியமாகும்

1. பாதுகாப்பு படையினரின் அறிவுறுத்தலுக்கு அமைய அடக்கஸ்தல வளாகத்தில்  நடந்து கொள்ள வேண்டும்

2. முக கவசம் அணிந்து சமூக இடைவெளி கட்டாயம்  பேணப்பட வேண்டும் 

3. தாங்கள் பிரார்த்தனை செய்வதற்காக வருகின்ற உறவினர்  அடக்கம் செய்யப்பட்டிருக்கும் கப்ர் அருகே செல்வது வைரஸ் தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது

4. அடக்கஸ்த்தலத்தை போடோ , வீடியோ எடுப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் ஆகவே  அன்றோய்டு போன்களை  மையவாடிக்கு வருகின்ற வாகனத்தில் வைத்துவிட்டு பிரார்த்தனைகளில் ஈடுபடவேண்டும் .