இன்று பிற்பகல் Horowhenua வில் கார் மற்றும் டிரக் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பிற்பகல் 1 மணியளவில் Hokio Sand Road மற்றும் Moutere சாலைக்கு இடையில் உள்ள ஹொக்கியோ கடற்கரை சாலைக்கு அவசர சேவைகள் அழைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிபடுத்தினர்.

இந்நிலையில் விபத்துக்கான சூழ்நிலையை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.