இன்று நியூசிலாந்தில் 98 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அவற்றில் ஆக்லாந்தில் 74 பேரும், வைகாடோவில் 10 பேரும், Bay of Plenty  இல் 08 பேரும் மற்றும் Nelson Marlborough வில் 05 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் 07 பேர் உட்பட 66 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் நேற்றையதினம் 24,913 தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டன.

அவற்றில் 4571 முதல் டோஸ்கள், 10,652 இரண்டாவது டோஸ்கள் ஆகும்.

இந்நிலையில் நியூசிலாந்தில் 93 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசிகளை பெற்றுள்ளனர் மற்றும் 88 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசியை பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.