இந்திய-ரஷ்ய உச்சி மாநாடு டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று பிற்பகல் டெல்லி வருகிறார்.

விமான நிலையத்தில் இருந்து மாநாடு நடைபெறும் அரங்கிற்கு செல்லும் அதிபரை பிரதமர் மோடி வரவேற்கிறார். பின்னர் இரு தலைவர்களும், தங்கள் நாட்டு உயர்மட்ட குழுவினருடன் பரஸ்பரம் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

இதைத்தொடர்ந்து மோடி-புதின் இடையேயான நேருக்கு நேர் சந்திப்பு நடைபெறுகிறது.

இந்த உச்சி மாநாட்டுக்கு இறுதியில் இரு நாடுகளுக்கு இடையே 10 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படுகின்றன.

பின்னர் குறித்த மாநாடு நிறைவடைந்ததும் அதிபர் விளாடிமிர் புதின் நாடு திரும்புவார் என‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.