வெலிங்டனைச் சுற்றியுள்ள பல சாலைகள் கனமழை காரணமாக அணுகல் தடைசெய்யப்பட்ட பின்னர் இன்று இரவு முழுவதும் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், வெலிங்டனின் சில பகுதிகளில் வழக்கமான டிசம்பர் மாதத்தை விட இன்று அதிக மழை பெய்துள்ளது.

Paraparaumu வில் உள்ள Waterfall Road மற்றும் Rimu சாலை ஆகியவை Wharemaku நீரோடையில் நீர் குறையும் வரை மூடப்பட்டிருக்கும்.

Lower Hutt, Block Road, Harcourt Werry Drive மற்றும் ரிவர் பேங்க் கார் பார்க் ஆகியவை வெள்ள நீர் குறையும் வரை மூடப்பட்டிருக்கும்.

அவை அனைத்தையும் நாளை காலை 6 மணிக்குள் திறக்கப்படுவதை ஹட் நகர சபை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஒரு செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,  ஒரு சில குடியிருப்பாளர்கள் வீடுகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பு குழுவினர் அவற்றிற்கு பதிலளித்ததாக தெரிவித்தார்.

ரிவர்பேங்க் கார் பார்க்கிங்கில் ஏற்பட்ட வெள்ளத்தால் கார்கள் சேதமடைந்ததாக Lower Hutt இல் உள்ளவர்கள் தெரிவித்தனர்.

Hutt River பெருக்கெடுத்ததால் இன்று பிற்பகல் மக்கள் தங்கள் கார்களை மீட்டெடுக்குமாறு ஹட் நகர சபை அறிவுறுத்தியது.

 கார் பார்க்கிங்கில் சுமார் 10 கார்கள் பகுதியளவு நீரில் மூழ்கியுள்ளன.

வெலிங்டனில் இரவு 9 மணி வரையும்,  Kapiti, Horowhenua மற்றும் Tararua மலைத்தொடரில் நள்ளிரவு வரை கனமழை எச்சரிக்கைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.