இன்று நியூசிலாந்தில் 135 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அவற்றில் ஆக்லாந்தில் 125 பேரும், வைகாடோவில் 8 பேரும், Canterbury இல் இரண்டு பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் 07 பேர் உட்பட 77 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் நேற்றையதினம் 11,931 தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டன.

அவற்றில் 2711 முதல் டோஸ்கள், 6757 இரண்டாவது டோஸ்கள் ஆகும்.