இறக்குமதியுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு இன்னும் ஒன்றரை மாதங்களுக்கு மாத்திரமே போதுமானது என எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

திஸ்ஸமஹாராமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஒரு வலுவான நாடு ஏழு முதல் எட்டு மாதங்களுக்கு வெளிநாட்டு கையிருப்பை வைத்திருக்க வேண்டும்.
எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டால் நாடு அழிந்துவிடும், தொழிற்சாலைகள் இயங்க முடியாமல் மக்கள் மேலும் சுமைக்கு ஆளாக நேரிடும் எனவும் அவர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும்.

அரசாங்கம் பொது மக்களுக்குச் சுமையாக உள்ளது என்பதை அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர். அத்தியாவசியப் பொருட்களை வரிசையில் நின்று பெற்றுக் கொள்ளவா 6.9 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள் என அவர் கேள்வி எழுப்பினார்.

உர நெருக்கடி தொடர்பில் அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் முரண்பாடான கருத்துக்களை வெளியிடுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

உர நெருக்கடி தொடர்பாக எடுக்கப்பட்ட பல முடிவுகளை அரசாங்கம் மாற்றியமைத்துள்ளதுடன், தமது தீர்மானங்களை நடைமுறைப்படுத்திய அதிகாரி களையும் அரசாங்கம் நீக்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.