இன்று நியூசிலாந்தில் 178 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் மருத்துவமனையில் 77 பேர் இருப்பதாகவும் அவற்றில் 8 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாக 
சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேற்று பிற்பகல் ஆக்லாந்து நகர மருத்துவமனையில் கொவிட் நோயாளி ஒருவரின் மரணத்தையும் அமைச்சகம் அறிவித்துள்ளது.

50 வயது மதிக்கத்தக்க குறித்த நோயாளி நவம்பர் 5 ஆம் திகதி அன்று ஆக்லாந்து நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எல்லையில் இன்று நான்கு கொவிட் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

இதனிடையே நேற்றையதினம் 18,623 தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டன.  அவற்றில் 6600 முதல் டோஸ் மற்றும் 12,023 இரண்டாவது டோஸ் ஆகும்.

இன்றுவரை, நியூசிலாந்தில் தகுதியானவர்களில் 92 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசி மற்றும் 84 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசியை பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.