இன்று பிற்பகல் மேற்கு ஆக்லாந்தின் க்ளென் ஈடனில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார்.

இந்நிலையில் ஆக்லாந்தின் க்ளென் ஈடனில் உள்ள விர்கோ பிளேஸை ஆயுதமேந்திய பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர்.

காயமடைந்த நபர் பல காயங்களுடன் வைடகெரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பின்னர் ஆக்லாந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் கெவின் மெக்நாட்டன் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

ஆயுதமேந்திய பொலிஸார் மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகள் மதியம் 2  மணியளவில் Virgo ப்ளேஸில் ஒரு முகவரியில் நடந்த குறித்த சம்பவத்திற்கு வருகை தந்தனர்.

ஆயுதம் ஏந்திய அதிகாரிகள் வீதியை மறித்து சாலையை மு‌டக்கினர்.

அந்த நபர் எவ்வாறு காயமடைந்தார் என்பது பற்றிய முழு சூழ்நிலையையும் நிறுவ விசாரணை தொடங்கப்பட்டது.

"இன்று மதியம் க்ளென் ஈடனில் உள்ள விர்கோ பிளேஸில் பல நபர்களை உள்ளடக்கிய வாக்குவாதத்தின் போது குறித்த நபர் காயம் அடைந்ததாக ஆரம்ப விசாரணைகள் குறிப்பிடுகின்றன" என்று மெக்நாட்டன் கூறினார்.

"பல பேர் பின்னர் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டனர் மற்றும் அந்த நபர்கள் எங்கள் விசாரணைகளுக்கு உதவுகிறார்கள்."

அவர்கள் பாதிக்கப்பட்டவருக்குத் தெரிந்தவர்கள் என நம்பப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் இருந்த ஒரு பொலிஸ் அதிகாரி குடியிருப்பாளர்களிடம் தெரு "இரண்டு மணி நேரம் தடுக்கப்படும் என தெரிவித்தார்.