டெஸ்டினி சர்ச் தலைவர்கள் பிரையன் மற்றும் அவரது மனைவி ஹன்னா தமாகி ஆகியோர் கொவிட் -19 விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பிரையன் டமாகி இன்று மதியம் ஆக்லாந்து மாவட்ட நீதிமன்றத்தில் வீடியோ இணைப்பு மூலம் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் -19 பொது சுகாதார உத்தரவுக்கு இணங்கத் தவறியதாகவும் மேலும் அவரது ஜாமீன் நிபந்தனைகளை மீறியதற்காகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

விதிமுறைகளுக்கு இணங்கத் தவறியதற்காக ஹன்னா தமாகி மீதும் இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

ஆக்லாந்து டொமைனில் லாக்டவுன் எதிர்ப்பு மற்றும் கொவிட் விதிமுறைகளுக்கு எதிரான போராட்டங்களில் பேசியதற்காக பிரையன் டமாகி மீது குற்றம் சாட்டப்படுவது இது மூன்றாவது முறையாகும்.

 அவரது ஜாமீன் நிபந்தனைகளில் அவர் இதேபோன்ற கூட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது என்பதும் அடங்கும், ஆனால் கடந்த சனிக்கிழமை அவர்  ஒரு கூட்டத்தில் உரையாற்றினார்.

இன்று காலை ஆக்லாந்து மத்திய காவல் நிலையத்திற்கு வெளியே ஆதரவாளர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார்.

லாக்டவுன் எதிர்ப்பு போராட்டங்களில் முக்கிய பங்கு வகித்த தம்பதிகள் கடந்த சனிக்கிழமையன்று ஆக்லாந்து டொமைன் கூட்டத்தில் எச்சரிக்கை நிலை கட்டுப்பாடுகளை மீறியதற்காக கைது செய்யப்பட்ட இருவரும் குற்றம் சாட்டப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.

மேலும் ஆக்லாந்து டொமைனில் சனிக்கிழமை நடந்த நிகழ்வு தொடர்பாக மேலும் கைதுகள் இடம்பெறலாம் என ஆக்லாந்து நகர மாவட்ட தளபதியான கண்காணிப்பாளர் ஷனன் கிரே கூறுகிறார்.