நியூசிலாந்தில் இன்று 215 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

ஒரு அறிக்கையில், ஆக்லாந்து சிட்டி மருத்துவமனையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

50 வயதான குறித்த நபர் நவம்பர் 17 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் ஆறு பேர் உட்பட 88 பேர் மருத்துவமனையில் இருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்றைய தொற்றாளர்களில்  ஆக்லாந்தில் 196 பேர், வைகாடோவில் 11 பேர், நார்த்லேண்டில் நான்கு பேர், பே ஆஃப் பிளெண்டியில் ஒருவர், லேக்ஸ் இல் இருவர்,மற்றும் மிட் சென்ட்ரலில் ஒருவரும் அடங்குவர்.

மேலும் இதுவரை 91 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசி மற்றும் 84 சதவீதம் பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.