Breaking News

அவுஸ்திரேலியா செல்லவிருப்போருக்கான நல்ல செய்தி

அவுஸ்திரேலியா செல்லவிருப்போருக்கான  நல்ல செய்தி

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட விசாவை வைத்திருப்பவர்கள் டிசம்பர் 1 முதல் அவுஸ்திரேலியா செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சர்வதேச பயணத்தை மறு தொடக்கம் செய்வதற்கும் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் கட்டுப்பாடுகளைத் தளர்த்துகின்ற தொடரின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை உள்ளது என அவுஸ்திரே லியப் பிரதமர் ஸ்கொட் மொரிசன் கூறினார்.

இதன்படி, அவுஸ்திரேலியாவில் கல்வி கற்கும் பல்கலைக்கழக மாணவர்கள், விசா வைத்திருப்பவர்கள், வர்த்தகர்கள் ஆகியோர் அவுஸ்திரேலியாவுக்கு வர அனுமதிக்கப்படுகின்றனர்.