மும்பையில் இருந்து கோவா சொகுசு கப்பலில் கடந்த மாதம் 2ஆம் திகதி போதை பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய அதிரடி சோதனையின் போது கப்பலில் போதை விருந்து நடந்தது உறுதி செய்யப்பட்டது.

இதன்போது பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து போதை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதில் ஆர்யன் கான் மும்பை ஆர்தர் ரோட் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து மும்பை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டதை அடுத்து ஆர்யன் கான் உள்ளிட்ட 3 பேருக்கு கடந்த மாத இறுதியில் மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. 

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்பது உட்பட பல்வேறு நிபந்தனைகளுடன் ஆர்யன் கானுக்கு பிணை வழங்கப்பட்டது.

அதனடிப்படையில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு ஆர்யன் கான் தனது வழக்கறிஞர் நிகில் மானேஷிண்டேவுடன் இன்று நேரில் ஆஜராகி கையெழுத்திட்டார்.