திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த்தின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகவே அண்ணாத்த அப்டேட்ஸ், தேசிய விருது என அடுத்தடுத்து ரசிகர்களை குதூகலப்படுத்தி வந்த நடிகர் ரஜினிகாந்த், யாரும் எதிர்பார்க்காத வகையில், நேற்றிரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டெல்லியில் நடந்த விருது வழங்கும் விழாவில் சுறுசுறுப்பாக இருந்த ரஜினி, திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், அவரது ரசிகர்கள் பதறிப் போனார்கள்.

இதனிடையே, வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், அவர் நலமுடன் இருப்பதாக லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதனால், அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், ரஜினி உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டு ரசிகர்களை மருத்துவமனை நிர்வாகம் கூல் படுத்தியுள்ளது. அந்த அறிக்கையில், “தலைசுற்றல் காரணமாக நடிகர் ரஜினிகாந்த் நேற்று மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு கரோடிட் அர்ட்டரி ரீவேஸ்குலரைசேஷன் என்னும் சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சைக்கு பிறகு ரஜினிகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. விரைவில் சிகிச்சை முடிந்து அவர் வீடு திரும்புவார்,” எனக் கூறப்பட்டுள்ளது.