கடந்த 2020ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், மற்றும் ரோகித் சர்மா ஆகியவர்களுடன்  இன்ஸ்டாகிராமில் சஹாலின் டிக் டாக் வீடியோ பற்றி பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது குறிப்பிட்ட வார்த்தை கூறி சஹாலை  கிண்டலாக பேசினார் . யுவராஜ் பேசிய இந்த வார்த்தைகள் பட்டியல் இன மக்களை அவமதிக்கும் வகையில் இருந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.

இதனால் யுவராஜ் மீது கடும் கண்டனங்கள் எழுந்தது . அதற்கு அப்போதே யுவராஜ் மன்னிப்புக் கோரியிருந்தார்.

அவர் கூறியதாவது  " நான் எப்போதும் நம் நாட்டு மக்களிடையே சாதி , நிறம் பாலின பாகுபாடுகளுடன் பழகியதில்லை , நான் என்னுடைய நண்பர்களுடன் பேசியது தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டுவிட்டது . என்னுடைய பேச்சு யாரையாவது காயப்படுத்தி இருந்தால் , பொறுப்புள்ள இந்திய குடிமகனாக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் " என யுவராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார் .

இதனிடையே ஹரியானா மாநில போலீசார் காவல் நிலையத்தில் பட்டியலின  அமைப்பை சேர்ந்த ஒருவர் யுவராஜ் சிங் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக நேற்றிரவு யுவராஜ் சிங் ஹரியானா போலீசார் கைது செய்தனர்.

3 மணி நேரம் விசாரணைக்குப் பிறகு ஜாமினில்  விடுதலை செய்யப்பட்டார். யுவராஜ் சிங் கைது செய்யப்பட்ட சம்பவம் , கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .