பொலன்னறுவை வரலாற்று சிறப்புமிக்க சொலஸ்மஸ்தான ரஜமஹா விகாரையை புனித பூமியாக பிரகடனப்படுத்தி சன்னஸ் பத்திரம் கையளிக்கும் புண்ணிய நிகழ்வு புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று (20) கல்கே விகாரை உத்தராராமவில் இடம்பெற்றது.

முதலில் சமய வழிபாடுகளில் ஈடுபட்ட கௌரவ பிரதமரினால் சியம் மஹா நிகாயவின் அஸ்கிரி பீட அனுநாயக்கர், பொலன்னறுவை சொலஸ்மஸ்தானாதிபதி கண்டி அஸ்கிரிய பீடத்தின் கெடிகே ரஜமஹா விகாராதிபதி அதிவணக்கத்திற்குரிய வெடறுவே ஸ்ரீ உபாலி அனுநாயக்க தேரரிடம் சன்னஸ் பத்திரம் கையளிக்கப்பட்டது.

அதிவணக்கத்திற்குரிய வெடறுவே ஸ்ரீ உபாலி அனுநாயக்க தேரர் உள்ளிட்ட மஹா சங்கத்தினரால் இதன்போது பிரதமர் மற்றும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களை ஆசிர்வதிக்கும் வகையில் பிரித் பாராயண நிகழ்வொன்றும் முன்னெடுக்கப்பட்டது.