அட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் பாமஸ்டன் பகுதியில் காரும் முச்சக்கர வண்டியும் மோதிக் கொண்ட தில் முச்சக்கர வண்டியின் சாரதி காயமடைந்து நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை  இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றது.

நுவரெலியாவில் இருந்து நாவலப்பிட்டி நோக்கிப் பயணித்த காரின் மீது லிந்துலை பகுதியிலிருந்து நானுஓயா பகுதிக்குப் பயணித்த முச்சக்கர வண்டி மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

லிந்துலை பகுதியிலிருந்து நானுஓயா நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டி முன்னால் பயணித்துக் கொண்டிருந்த வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட சந்தர்ப்பத்தில் எதிர்த் திசையில் வந்த காருடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பாக  மேலதிக  விசாரணைகளை நானுஓயா  பொலிஸார்  முன்னெடுத்து வருகின்றனர்.