மக்கள் சக்தி கட்சியிலிருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்ன தேரர் நீக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சி தேர்தல் ஆணைக்குழு வுக்கு அறிவித்துள்ளது.

அதுரலியே ரத்ன தேரரை கட்சியிலிருந்து நீக்குவதாகக் குறிப்பிட்டு அக்கட்சியின் பொதுச் செயலாளரால் கடிதம் ஒன்று நேற்றைய தினம் அனுப்பி வைத்ததாகத் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சி ஹேவா தெரிவித்துள்ளார்.

எங்கள் மக்கள் சக்தி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள அத்துரலியே ரத்ன தேரர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கும் சாத்தியம் உள்ளதாகத்  தெரிகிறது