நியூசிலாந்தில் இன்று 41 கொவிட் தொற்றாளர்கள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்று ஊடக சந்திப்பு இல்லை.சுகாதார அமைச்சகம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், நிர்வகிக்கப்பட்ட தனிமைபடுத்தலில் இரண்டு கொவிட் தொற்றாளர்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது.

இன்றைய சமூக தொற்றாளர்களில் ஒருவர் வைகாடோவில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தீவிர சிகிச்சை பிரிவில் ஆறு பேர் உட்பட 31 பேர் தற்போது  மருத்துவமனையில் உள்ளனர்.

இந்நிலையில் சமூகத்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1895 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து நியுசிலாந்தில் உறுதிபடுத்தப்பட்ட தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 4580 ஆகும்.

அரசாங்கத்தின் 'சூப்பர் சாட்டர்டே' தடுப்பூசி நிகழ்வு, மதிய வேளையில், அதன் இலக்கு 100,000 டோஸ்களில் பாதி இலக்கை ஏற்கனவே அடைந்துள்ளது.

இதனிடையே நேற்றையதினம் 69,663 டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் 14,037 முதல் டோஸ் மற்றும் 55,626 இரண்டாவது டோஸ் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.