கொவிட் -19 தடுப்பூசியைப் பெறுவதற்கு பல்கலைக்கழக மாணவர்கள் தயக்கம் காட்டுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் 20 முதல் 30 வயதிற்குட்பட்டவர்களில் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை 55%க்கும் குறைவாக உள்ளதாக அச்சங்கத்தின் தலைவரான உபுல் ரோகண தெரிவித்துள்ளார்.

அனைத்து தடுப்பூசிகளும் அங்கீகரிக்கப்பட்டிருப்பதால், பல்கலைக்கழக மாணவர்கள் தடுப்பூசிகளுக்கு முன்னுரிமை அளிக்காமல் விரைவில் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.