யுனிசெப்பின் இலங்கைப் பிரதிநிதியான கிறிஸ்டியன் ஸ்கூக்குடன் சுகாதார அமைச்சில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில், கொவிட்-19 இன் போது இலங்கையின் சிரேஷ்ட பிரஜைகள் மீது குறிப்பிடத்தக்க கவனம் செலுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சில வளர்ந்த நாடுகள் தங்களது சிரேஷ்ட பிரஜைகளுக்கு கொவிட் சிகிச்சையளிப்பதை புறக்கணித்ததாகவும் இதன்போது  சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.

குறிப்பிட்ட நாடுகளில் இத்தகைய அலட்சியப் போக்கால்  60 வயதுக்கு மேற்பட்டவர்களின் இறப்பு வீதம் கணிசமாக உயர்ந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

கொரோனா தொற்று நோயை எதிர்த்துப் போராடுவதில் இலங்கை இப்போது வெற்றிகரமான கட்டத்தை எட்டியுள்ளதாகவும், தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஆதரவைப் பெற்றுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.