சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து வெளியில் வந்த வசிகலா, தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக தெரிவித்து, பின்னர் அந்த முயற்சியில் இருந்து பின்வாங்கினார். 

இந்தநிலையில் அ.தி.மு.க. பொன்விழா கொண்டாட்டங்கள் எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவிருக்கிறது.

இதையொட்டி 16ஆம் திகதியன்று மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் அண்ணா சமாதிகளுக்கு சென்று சசிகலா மரியாதை செலுத்தவுள்ளார்.

இதனைதொடர்ந்து 17ஆம் திகதி தியாகராய நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்திற்கு செல்லவும் திட்டமிட்டுள்ளார்.

அக்டோபர் 16 மற்றும் 17ஆம் திகதி குறித்த நினைவிடங்களுக்கு செல்வதால் சசிகலாவுக்கு பாதுகாப்பு கேட்டு சென்னை காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் தென்சென்னை மாவட்ட முன்னாள் இணை செயலாளர் வைத்தியநாதன் அளித்துள்ள குறித்தமனுவில், சசிகலாவை ‘அதிமுக பொதுச்செயலாளர்’ என்றே குறிப்பிட்டுள்ளார்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, அண்ணா சமாதிகளுக்கு சென்று மாலை அணிவிக்கும் சசிகலா அதன் பிறகு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.