இன்று காலை Mt Albert  இல் உள்ள வீட்டில் இருந்து காணாமல்போன லீனா ஹாரப் என்ற ஆக்லாந்து பெண்ணை பொலிஸார் தேடும் பணியில் ஈடுபட்ட போது அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலம், லீனா ஹாரப் உடையது என்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர்.

28 வயதான ஹாரப் கடைசியாக இன்று காலை 6 மணியளவில் வீட்டை விட்டு நடைப்பயிற்சிக்காக சென்றுள்ளார்.

அவள் திரும்பி வரத் தவறிவிட்டாள், மதியம் 1 மணிக்கு முன்னதாக அவளது குடும்பத்தினரால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்,

"குறித்த பெண்ணிற்கு என்ன நடந்தது என்பதை அறிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர், மேலும் நாளையதினம் பிரேத பரிசோதனை நடைபெறவுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்