விஜய்சேதுபதி திரிஷா நடிப்பில் வெளிவந்த 96 திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது காதலின் தொடக்கநிலை புள்ளியை  எல்லோர் மனதிலும்  மீண்டும் ஆரம்பித்த கதைக்களம் இப்படம் .

இயக்குனர் பிரேம் இயக்கத்தில் தயாரான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடி தீர்க்கப்பட்டது , வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை தந்தது .

இந்த படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இதனுடைய உரிமையை  அஜய் கபூர் பெற்றுள்ளார் . இப்படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்கப்படும் என்று அறிவிப்பு வந்துள்ளது