அவுஸ்திரேலியாவின் விக்டோரியாவி;ன் வடகிழக்கிலுள்ள மான்ஸ்பீல்டை மூன்று பூகம்பங்கள் தாக்கியுள்ளன.

கட்டிடங்கள் பலத்தசேதமடைந்துள்ள போதிலும் உயிரிழப்புகள் எவையும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அல்பைன் தேசிய பூங்கா பகுதியில் முதலாவது பூகம்பம் உணரப்பட்டது ( 5.8) என தெரிவித்துள்ள அதிகாரிகள்  பத்து கிலோமீற்றர் ஆழத்தில் இது காணப்பட்டதாகவும் ஐரோப்பிய குடியேற்றத்தின் பின்னர் கிழக்கு அவுஸ்திரேலியாவை தாக்கிய கடுமையாக பூகம்பம் இதுவெனவும் தெரிவித்துள்ளனர்.

முதலாவது பூகம்பம் தாக்கி 15 நிமிடத்தின் பின்னர்இரண்டாவது பூகம்பமும் ( 4.00) அதன் பின்னர் மூன்றாவது பூகம்பமும்( 6.00) தாக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவிலிருந்து கவலை வெளியிட்டுள்ள பிரதமர் ஸ்கொட்மொறிசன் உயிரிழப்புகள்  குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
மெல்பேர்ன் விக்டோரியா சிட்னி போன்ற பகுதிகளிலும் பூகம்பம் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மெல்பேர்னில் தொடர்மாடிகளில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்